தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை! - குடும்ப பிரச்னை

ஈரோடு அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மூன்று வயது குழந்தையை கொன்ற தாய் தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை
தற்கொலை

By

Published : Feb 8, 2023, 7:44 AM IST

Updated : Feb 8, 2023, 9:31 AM IST

ஈரோடு:புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி செல்வராஜ் (38). இவருக்கு சரிதா (30) என்ற மனைவியும், மூன்று வயது ஆண் குழந்தையும் இருந்தனர். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவு இருவருக்கும் குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி அன்று செல்வராஜ் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து நேற்று (பிப்.7) மாலை வீடு திரும்பினார். அப்போது பலமுறை அழைத்தும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த செல்வராஜ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தார்.

அப்போது சரிதா மற்றும் மூன்று வயது குழந்தை இருவரும் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வராஜ் சத்தம் போடவே அக்கம் பக்கம் இருந்தவர்கள் வீட்டின் முன் திரண்டனர். பின்னர் இது குறித்து புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தாய் மற்றும் மூன்று வயது குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தற்கொலையைக் கைவிடுக

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குழந்தையை முதலில் கொன்றுவிட்டு பின்னர் சரிதா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. மேலும், சரிதாவின் இந்த முடிவுக்கு குடும்ப பிரச்சனை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை காவலர் மரணத்தில் திடீர் திருப்பம்.. வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு!

Last Updated : Feb 8, 2023, 9:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details