ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள தொட்டியபாளையம் அடுத்துள்ள பனங்காட்டு காலனி பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்களிடம் பிரதமர் மோடி பெயரில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தருவதாகக் கூறி, மக்களை ஏமாற்றி ஐந்து பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் பணம் வாங்கியுள்ளது. அந்தக் கும்பல் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கிராம மக்களிடம் ஆயிரத்து 500 ரூபாய் பெற்றுச் சென்றுள்ளது.
இதுவரை எத்தகைய உதவியும் கிராம மக்களுக்கு கிடைக்காத நிலையில் இன்று மீண்டும் ஐந்து பேர் கொண்ட கும்பல் கிராம மக்களை சந்தித்துள்ளனர். அப்போது, தலா ஐந்தாயிரம் ரூபாய் அதோடு உங்களது அசல் வங்கி கணக்கு புத்தகத்தையும் கொடுங்கள், விரைவில் உங்களுக்கு பணம் வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.