ஈரோடு: பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா வரும் மார்ச் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
இவ்விழாவையொட்டி தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் மைசூரில் நாய்சேகர் படப்பிடிப்பை முடித்து விட்டு நடிகர் வடிவேல் பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வந்தார். அவரை கோயில் ஊழியர்கள் வரவேற்றனர்.