தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வனவிலங்கு கணக்கெடுப்பு: யானை தாக்கி இருவர் உயிரிழப்பு

ஈரோடு: வனவிலங்கு கணக்கெடுப்பின்போது யானை தாக்கி வனக்காவலர், சமூக ஆர்வலர் என இருவர் உயிரிழந்தனர்.

elephant attack
elephant

By

Published : Dec 17, 2020, 7:29 PM IST

Updated : Dec 18, 2020, 2:52 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் விளாமுண்டி வனச்சரகத்தில் ஆறு நாள் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று (டிசம்பர் 17) தொடங்கியது. இதில் வனக்காவலர், வனக்காப்பாளர், சமூக ஆர்வலர் உள்ளிட்ட ஐந்து பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

வனவிலங்கு கணக்கெடுப்பு

கல்லாம்பாளையம் வனப்பகுதியில் கணக்கெடுப்பின்போது அங்கு மறைந்திருந்த யானை திடீரென தாக்கியது. இதில் வனக்காவலர் சதீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்த மற்றொரு ஊழியர்கள் தப்பிக்க முயன்றபோது வனக்காப்பாளர் பொன் கணேஷை யானை தாக்கியது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இச்சம்பத்தின் போது கணக்கெடுப்பில் பங்கேற்ற சமூக செயற்பாட்டாளர் மாயமானார்.

யானை தாக்கி இறந்தவர்

யானை தாக்கி இருவர் உயிரிழப்பு

காயமடைந்த வன ஊழியரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத் தொடர்ந்து, காணாமல் போன சமூக செயற்பாட்டாலர் பிரபாகரனை வனத்துறையினர் தேடினர். அப்போது அவரும் யானை தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, யானை தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது. உயிரிழந்த வனக்காவலர் சதீஷ் அண்மையில் பணிக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Dec 18, 2020, 2:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details