தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் - Erode Sathyamangalam

ஈரோடு: சத்தியமங்கலம், புலிகள் காப்பகம் விளாமுண்டி வனச்சரகத்திலுள்ள காட்டு யானைகள்,விவசாய தோட்டத்திற்குள் புகுந்து, வாழை மரங்களை சேதப்படுத்தின.

காட்டு யானைகள் சேதப்படுத்திய வாழை மரங்கள்
காட்டு யானைகள் சேதப்படுத்திய வாழை மரங்கள்

By

Published : Mar 9, 2021, 3:44 PM IST

சத்தியமங்கலம், புலிகள் காப்பகம் விளாமுண்டி வனச்சரகத்தில் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி, அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து வாழை, கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்

இந்நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய மூன்று காட்டு யானைகள், பவானிசாகர் அடுத்த கரிதொட்டம்பாளையம் கிராம விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், சேதமான வாழை மரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.

காட்டு யானைகள் சேதப்படுத்திய வாழை மரங்கள்

சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், யானைகள் வனத்தை விட்டு வெளியே வராமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ராசு, தங்கராஜ் உள்ளிட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்னர்.

இதையும் படிங்க: பரம்பிக்குளம் வனச்சரகத்தில் ஜோடியாக சாலையை கடந்த புலி

ABOUT THE AUTHOR

...view details