ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராம மக்கள் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சில மாதங்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள தென்னை, வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் மல்லன்குழி பகுதியில் உள்ள விவசாயி முத்துசாமி என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்தன. அங்குள்ள தென்னந்தோப்பில் நுழைந்து 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை தும்பிக்கையால் பிடுங்கி சேதப்படுத்தின.