ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அருகே காட்டு யானை கருப்பன் ஊருக்குள் புகுந்து மக்காச்சோளம், வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயப்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பயிர்களை பாதுகாக்க இரவு நேர காவலுக்கு செல்லும் விவசாயிகளை யானை தாக்குவதால் மனித மோதல் ஏற்படுகிறது. இந்த ஒற்றையானை ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையிலும் முகாமிட்டு வாகன ஓட்டிகளை துரத்துகிறது.
ஈரோட்டில் காட்டு யானை கருப்பனை விரட்ட கும்கி யானைகள் நிறுத்தம் - Kumki elephants has been summoned
ஆசனூர் பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்த பயிர்களை சேதப்படுத்தும் கருப்பன் யானை விரட்ட கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இதனால் அச்சமடைந்த விவசாயிகள், வாகன ஓட்டிகள் அட்டகாசம் செய்யும் கருப்பன் யானையை விரட்ட வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். இதயைடுத்து டாப்சிலிப்பில் இருந்து சின்னதம்பி, ராமு ஆகிய இரு கும்கியானைகள் வரவழைக்கப்பட்டு ஆசனூரில் தங்க வைக்கப்பட்டுள்ளன. கருப்பன் யானையை காட்டுக்குள் துரத்துவதற்கு கும்கியானைகள் தயாராக உள்ளன. ஒற்றையானை அச்சத்தை போக்க ஆசனூரில் கும்கி யானைகளுடன் வனத்துறை உலா வந்தனர். ஒற்றையானை கிராமத்தில் புகும் வழித்தடத்தில் கும்கி யானைகளை வனத்துறையினர் அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க:இசை மன்றங்களில் தமிழர்களின் மரபு ஒலிக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்