தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காரை துரத்திய காட்டு யானை - அலறிய பயணிகள்

ஈரோடு: ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று காரை துரத்தியதால் காரில் இருந்தவர்கள் அச்சமடைந்து அலறினர். காட்டு யானை காரை துரத்தியதால் அச்சமடைந்து அலறிய பயணிகள்

elephant
elephant

By

Published : Jan 19, 2020, 10:39 AM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழ்நாடு - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் அவ்வப்போது யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுவது வழக்கம்.

இந்நிலையில், இன்று அதிகாலை தாளவாடி மலைப்பகுதியிலிருந்து கோவை செல்வதற்காக ஐந்துக்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஆசனூர் அருகே வனச்சாலையில் அவர்கள் சென்றபோது சாலையோரம் நின்றிருந்த காட்டு யானை ஒன்று தீடிரென்று சாலையின் நடுவே வந்து காரை துரத்தியது. இதைக் கண்ட கார் ஓட்டுநர் உடனடியாக வாகனத்தின் விளக்குகளை அணைத்துவிட்டு காரை பின்னோக்கி நகர்த்தினார்.

காட்டு யானை காரை துரத்தியதால் அச்சமடைந்து அலறிய பயணிகள்

இருப்பினும், யானை விடாமல் துரத்தி வந்து காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்தது. இதனால் காரில் இருந்தவர்கள் அச்சமடைந்து அலறினர். காரின் அருகே நின்றிருந்த யானையைப் பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் யானையை துரத்திவிட்டு, காரில் இருந்தவர்களைக் காப்பாற்றினர். இதில் காரில் இருந்த அனைவரும் அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

இதையும் படிங்க: 'டிரைவரை ரிவேர்ஸ் எடுக்க வைத்த ஒற்றை யானை' - துரத்தும் வைரல் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details