ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிய கட்டடத்துக்கான பூமிபூஜை மற்றும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று (டிசம்பர் 31) நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மழையில் நனைந்தபடி மேடைக்கு சென்றார்.
மாணவிகள் மழையில் நனையும் போது எனக்கு மட்டும் குடை எதற்கு ? - பாதுகாவலரை கடிந்த அமைச்சர் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
ஈரோடு: கொட்டும் மழையில் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மாணவிகள் மழையில் நனையும் போது எனக்கு மட்டும் குடை பிடிக்க வேண்டாம் என்று பாதுகாவலர் ஒருவரை நகைச்சுவையாக கடிந்து கொண்டார்.
அங்கு அமர்ந்திருந்தபோது மழை அதிகமாக பெய்யத் தொடங்கியது. அப்போது, ஓடைமேற்கூரை என்பதால் மழைநீர் அமைச்சர் மீது விழுந்தது. விழா பந்தலில் அமர்ந்திருந்த மாணவிகளும் மழையில் நனைந்ததால், அவர்களை வகுப்பறைக்கு அழைத்து செல்லுமாறு அமைச்சர் கூறினார்.
அப்போது பாதுகாவலர் ஒருவர் அமைச்சருக்கு குடை பிடித்தபோது, மாணவிகள் மழையில் நனையும்போது எனக்கு மட்டும் குடை எதற்கு. ஏதோ இரண்டு ஓட்டு வாங்கலாம் என இருக்கிறோம், குடை பிடித்து அதையும் கெடுத்து விடாதீர்கள் என்று நகைச்சுவையாக கூறினார். அதன் பிறகு சைக்கிள்களை மேடைக்கு கொண்டு வந்து விழாவை அமைச்சர் தொடக்கி வைத்தார்.