பாரியூர் கொண்டத்து காளியம்மன்
வள்ளல் பாரி மன்னர் வழங்கிய பாரியூர் கொண்டத்து காளியம்மன்
வள்ளல் பாரி மன்னர் வழங்கிய பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம், தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்பர்.
100 ஆண்டுகளில் முதல்முறையாக திருவிழா ரத்து
வருமாண்டு ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடைபெறவிருந்த குண்டம் திருவிழா கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ரத்துசெய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 100 ஆண்டுகளாக நடைபெற்ற குண்டம் திருவிழா முதல்முறையாக ரத்துசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.