ஈரோடு:காங்கேயம் அருகே உள்ள ராட்டைசுற்றிபாளையத்தில் உலகப் புகழ்பெற்ற பைரவர் கோயில் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. கோயில் கட்டுமானப்பணிகள் தற்பொழுது முடியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் கோயிலின் நிலை குறித்து ஸ்வர்ண பைரவ பீடத்தின் அறக்கட்டளை நிர்வாகி கூறியிருப்பதாவது, ’உலகிலேயே எங்கும் இல்லாதவாறு 64 பைரவர்களும் ஒரே இடத்தில் இருப்பது மட்டுமல்லாது 39 அடி காலபைரவர் சிலை மிக பிரமாண்டமாக நிறுவப்பட்டு உள்ளது.
இந்த சிலை 'யுனிக்யூ புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்' எனும் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. கோயிலின் திருப்பணியானது ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது.
நம் ஆலயத்தில் பிரமாண்டமாக அமைந்துள்ள 650 கிலோ பஞ்சலோக சிலைக்கு நெய் ஆரோக்கியத்தின் வடிவமாகவும்; நாணயங்கள் செல்வத்தின் வடிவமாகவும் அர்ப்பணிக்கப்படும். மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நான்கு கால பூஜையாக நடைபெற உள்ளது.
10.3.2023: மாசி மாதம் 26ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சுவர்ண ஆகர்ஷண பைரவ பஞ்சலோக சிலைக்குப் பொதுமக்களால் நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது.