தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீரப்பனைப் பிடிக்க உதவிய கிராமத்திற்கு நலத்திட்ட உதவி! - காவல்துறை சார்பில் நலத்திட்ட உதவி

ஈரோடு: வீரப்பனைப் பிடிக்க உதவிய சத்தியமங்கலம் அடுத்த கெத்தேசால் கிராமத்திற்கு அதிரடிப்படை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

erode
erode

By

Published : Sep 11, 2020, 2:40 PM IST

ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில், கெத்தேசால் கிராமத்தில் விழிப்புணர்வு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுமக்கள் காவல் துறை நல்லுறவு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட கோவை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா கைப்பந்து போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கினார். 160 பழங்குடியினர் குடும்பங்களுக்கு நிவாரண பொருள்கள் மற்றும் மலைக் கிராமத்தில் வசிக்கும் பள்ளி குழந்தைகளுக்குப் பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டன.

மரத்தை நட்ட கோவை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா

பின்னர் ஐஜி பெரியய்யா செய்தியாளர்களிடம் பேசியதாவது, "வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட சிறப்பு இலக்குப் படையில் பணிபுரிந்த போது, நான் பலமுறை இந்தக் கிராமத்திற்கு வந்துள்ளேன். அப்போது இந்தக் கிராம மக்கள் உதவி செய்துள்ளனர். அதன் மூலம் இந்த கிராமத்திற்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

இக்கிராமத்தைச் சேர்ந்த இருவருக்கு கிடைக்கவேண்டிய அரசு வேலை மற்றும் நிவாரணத்தொகையைான 50 ஆயிரம் ரூபாய் 2001ஆம் ஆண்டு அதிரடிப்படை தலைவர் விஜயகுமார் மூலம் பெற்றுத் தந்தேன். மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின இளைஞர்களும் நன்கு படித்து காவல் துறையில் அவர்களுக்குத் தேவையான பயிற்சியும் அளிக்க உள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க:'மே மாதமே இந்தியாவில் 64 லட்சம் பேருக்கு கரோனா' - அதிர்ச்சியளிக்கும் ஐஎம்சிஆர் முடிவுகள்

ABOUT THE AUTHOR

...view details