மதிமுக சார்பில் தேர்தல் மற்றும் வளர்ச்சி நிதி பெறும் நிகழ்ச்சி ஈரோட்டில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. எம்.பி. கணேசமூர்த்தி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். பின்னர் ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு நாமக்கல் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளிடமிருந்து தேர்தல் நிதியை வைகோ பெற்றுக்கொண்டார்.
பின்னர் கட்சி நிர்வாகிகள் முன்பு பேசிய வைகோ, "ஈரோடு மாவட்டம்தான் தேர்தல் வளர்ச்சி நிதியில் பெரும் பங்காற்றியது. பொருளாதார சூழ்நிலை காரணமாக இந்த முறை நிதி குறைந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே மதிமுக மட்டும்தான் தேர்தலுக்கான நிதியை நிர்வாகிகளிடம் இருந்து பெறுகிறது.