சத்தியமங்கலம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்,
விநாயகர் சிலையை கரைக்க அனுமதிக்க மாட்டோம்! - keelbhavani
ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில் விநாயகர் சிலையை கரைக்க அனுமதிக்க மாட்டோம் என பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு
அப்போது அவர், கடந்த இரண்டு வருடங்களாக விநாயகர் சிலைகள் எங்களின் எதிர்ப்பையும் மீறி கீழ்பவானி வாய்க்காலில் கரைக்கப்பட்டு வந்தது. இதனால் பாசன விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். நீர் நிர்வாகம் பாதிப்படைகிறது.
ஆகவே நடப்பு ஆண்டில் விநாயகர் சிலைகளை கீழ்பவானி வாய்க்காலில் கரைக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.மேலும், சிலைகளை கரைக்க அரசு அனுமதிக்கக் கூடாது, அப்படி அனுமதித்தால் எங்களின் எதிர்ப்பை அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறினார்.