தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுகவைத் தோற்கடிப்போம்' இந்து முன்னணி - திமுகவை தோற்கடிப்போம்

ஈரோடு: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவைத் தோற்கடிப்பதற்கான பணிகளில் ஈடுபடுவோம் என, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தெரிவித்தார்.

DMK
DMK

By

Published : Feb 18, 2021, 8:03 PM IST

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரசுப்ரமணியம் கூறியதாவது, "சமீபகாலமாக இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பிரச்சனை நடக்கப்போகிறது.

அதனை முன்கூட்டியே தடுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் உளவுத்துறை சரியாக செயல்பட்டு கண்காணித்து தீவிரவாதத்தைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டெல்லியில் நடத்த இஸ்லாமிய பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது போல், மதுரையில் நடத்தவிருக்கும் இஸ்லாமிய பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது.

வரும் தேர்தலில் திமுகவைத் தோற்கடிக்க இந்து முன்னணி வேலை செய்யும். திமுக இரட்டை வேடம் போடுகிறது. ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி போன்றவர்கள் கைகளில் முருகர், வேல், பிள்ளையார் போன்றவற்றை வைத்து கொண்டு, மக்களை திமுகவின் பக்கம் திசை திருப்புகின்றனர். சட்ட விரோதமாகத் தேவாலயங்கள் கட்டுவதை அரசு தடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 'உளவுத்துறை சரியாக வேலை செய்யாததால் நாட்டில் வன்முறை ஏற்படுகிறது' - இந்து முன்னணி

ABOUT THE AUTHOR

...view details