ஈரோடு :மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் 250 கிலோ மீட்டர் தூரம் 10 நாட்கள் நடைபயணம் இன்று தொடங்கியது.கொடுமுடியிலிருந்து தொடங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதி சென்று 19 ம் தேதி முடிவடையும் இந்த விழிப்புணர்வு பிரச்சார நடைபயணைத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.
ராஜ்யசபா இடங்களை திமுகவிடம் கேட்போம்-சொல்கிறார் கே.எஸ்.அழகிரி - Tamilnadu rajyasabha seats
தமிழகத்தில் காலியாகும் மாநிலங்களை உறுப்பினர் சீட் காங்கிரஸ்க்கு ஒதுக்குமாறு திமுகவிடம் கோரிக்கை வைக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர் சந்திந்த கே.எஸ்.அழகிரி , “மாநிலத்திற்கான நிதியை கேட்கும் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிரிவினைவாதிகள் என கூறுவதை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. மத்திய நிதியமைச்சர் வார்த்தையை அளந்து பேச வேண்டும். மாநில உரிமைகளை கேட்கின்ற மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசு நிதியை குறைக்கிறது. ராஜீவ் காந்தி கொலையில் 7 பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதல் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது.
அரசியல் கட்சியினர் , குழுக்கள் 7 பேரை மட்டுமே தமிழர்கள் என்றால் 25 ஆண்டுகளாக 22 ஆயிரம் தமிழர்கள் சிறையில் உள்ளனர் அவர்களும் தமிழர்கள் தான் அவர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லையா ? 7 பேர் விடுதலையை கேட்பது தவறான போக்கு நீதிமன்ற உத்தரவு பிறகு விடுதலை செய்வது காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சேபம் இல்லை. தமிழகத்தில் காலியாகும் மாநிலங்களை உறுப்பினர் சீட் காங்கிரஸ்க்கும் ஒதுக்குமாறு திமுகவிடம் கோரிக்கை வைக்கப்படும். தமிழக பா.ஜ.கவில் வாய்சொல் வீரர்கள் அதிகம் என்று பேசினார்.
இதையும் படிங்க :பழங்குடியினரின் வளங்களைப் பறித்து பணக்காரர்களுக்கு கொடுக்கிறது பாஜக அரசு - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!