தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2ஆம் போக பாசனம்: பவானிசாகர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு

ஈரோடு: இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு இன்று (ஜன.7) தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

Bhavanisagar dam water release
பவானிசாகர் அணை

By

Published : Jan 7, 2021, 12:23 PM IST

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து, கீழ்பவானி திட்ட ஆயக்கட்டு நிலத்திற்கு இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர். அதன்படி, இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார்.

பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு

முதலமைச்சர் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் இன்று காலை (ஜன.7) பவானிசாகர் அணை கால்வாய் மதகு பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்துவிட்டனர். சீறிபாய்ந்து வந்த தண்ணீரை அலுவலர்களும், விவசாயிகளும் மலர்தூவி வரவேற்றனர்.

இந்த அணையிலிருந்து இன்று காலை 500 கன அடி நீர் திறந்துவிட்டப்பட்டது.தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து வாய்க்காலில் 2300 கனஅடியாக திறந்துவிடப்படும் என அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.

பவானிசாகர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு

மூன்று மாவட்டங்களில் பாசன வசதி

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 500 ஏக்கர் நிலத்திற்கு கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயின் இரட்டைப்படை மதகுகள் மூலமாகவும், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மூலமாகவும் கடலை, சோளம், எள் சாகுபடி செய்ய 5 நனைப்புக்கு ஜனவரி 7ஆம் தேதிமுதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

பவானிசாகர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு

கீழ்பவானி வாய்க்காலில் 10 நாள் தண்ணீர்த் திறப்பு, தண்ணீர் நிறுத்தம் 10 நாள் என குறிப்பிட்ட இடைவெளி விட்டு 67 நாள்களுக்கு 12 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படும்.
இன்றைய அணைநீர்மட்ட நிலவரம்: அணை நீர்மட்டம் 95.02 அடி, நீர்வரத்து 2822 கனஅடி, நீர்வெளியேற்றம் பவானிஆறு 600 கனஅடி, நீர்இருப்பு 25.1 டிஎம்சி

இதையும் படிங்க:பருவமழையால் நிரம்பிவழியும் சாத்தியார் அணை: மலர்த்தூவி வரவேற்ற விவசாயிகள்

ABOUT THE AUTHOR

...view details