தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானிசாகர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு! - The Bhawanisagar Dam

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையிலிருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

Bhavanisagar Dam

By

Published : Nov 1, 2019, 10:53 AM IST

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையான பவானிசாகர் அணை உள்ளது. இதன் மூலம் இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 105 அடி உயரம் 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதி, வட கேரளாவின் ஒருசில பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததால் 96 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கடந்த 22ஆம் தேதி 102 அடியைத் தாண்டியது.

இதையடுத்து, அணையிலிருந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் நீர்வரத்து குறைந்ததால் வரத்திற்கேற்ப உபரிநீர் வெளியேற்றப்பட்டுவந்தது. நேற்று காலை அணைக்கு நீர்வரத்து ஆறாயிரம் கனஅடியாக இருந்த நிலையில், நேற்று மதியம் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

பவானிசாகர் அணை

அதன்பின், பவானி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துவரும் நிலையில் நவம்பர் மாதம் அணையில் 105 அடிவரை நீர் தேக்கலாம் என்பதால் நள்ளிரவு முதல் பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பு நிறுத்தப்படும் என பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.

அணையிலிருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:பவானிசாகர் அணையில் நாளை முதல் 105 அடி நீர் தேக்க திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details