ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும்.
இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் கீழ்பவானி வாய்க்கால், இரட்டைப்படை மதகு பாசன பகுதிகளில் உள்ள ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை புன்செய் பாசனத்திற்கு நிலக்கடலை, எள் பயிரிட முறை விட்டு ஐந்து சுற்றுகளாக தண்ணீர் திறக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்க்காலில் முதல் சுற்று தண்ணீர் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்டு 21ஆம் தேதி நிறுத்தப்பட்டது.