தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை

ஈரோடு : பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக நீர் திறந்து விடப்பட்டதால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,796 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணை
பவானிசாகர் அணை

By

Published : Jun 9, 2020, 12:05 PM IST

தமிழ்நாட்டின் மிகப்பெரும் அணைகளில் ஒன்றான ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆண்டுதோறும் பாசன வசதி பெறுகின்றன.

பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவு 105 அடியாகவும், நீர் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. அணையின் நீர்பிடிப்புப் பகுதியான நீலகிரியில் இந்த வருடம் மழை பெய்யாததால், அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்தது.

இந்நிலையில், நீலகிரியில் உள்ள பில்லூர் அணையிலிருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதால், 456 கன அடியாக இருந்துவந்த அணையின் நீர்வரத்து, இன்று காலை 1,796 அடியாக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 79.46 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 15.4 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனம், குடிநீர் தேவைக்காக 500 கன அடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

கீழ்பவானி வாய்க்காலில் இன்னும் நீர் திறக்கப்படவில்லை. அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால், இந்த ஆண்டு குடிநீர் பிரச்னை ஏற்படாது என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க :சிப்காட்டில் சிறப்பு ரோந்து வாகனம் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details