ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி, செந்நாய், முள்ளம்பன்றி உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்துவருகின்றன. வன விலங்குகளின் தாகத்தைத் தீர்க்க வனப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட செயற்கைக் குட்டைகள் வனத் துறையினரால் அமைக்கப்பட்டுள்ளன.
வனவிலங்குகளின் தாகம் தீர்க்க செயற்கை தொட்டிகளில் நிரப்பப்படும் நீர் - வனவிலங்குகளின் தாகம் தீர்க்க செயற்கை தொட்டி
ஈரோடு: பர்கூர் மலைப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது.
Water filled in artificial tanks to quench the thirst of wildlife
இதில், வனவிலங்குகள் காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து தாகம் தீர தண்ணீர் குடித்துவிட்டுச் செல்லும். இந்த நிலையில் குட்டைகளில் தண்ணீர் இல்லாததாலும் கோடைகாலம் என்பதாலும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அருகே உள்ள ஊருக்குள்ளும், தோட்டத்துக்குள்ளும் புகுந்துவருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனை தடுக்க பர்கூர் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வன ஊழியர்கள் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவந்து செயற்கை குட்டைகளில் நிரப்பிவருகின்றனர்.