தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வாட்டர் பெல்' திட்டம் - ஊராட்சி பள்ளிகளில் அமல்! - Water Bell Scheme in erode panchayat Schools

ஈரோடு:சத்தியமங்கலம் ஊராட்சிப் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க வசதியாக  'வாட்டர் பெல்' திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

water bell
water bell

By

Published : Nov 28, 2019, 7:01 PM IST

பள்ளி மாணவர்கள், குடிநீர் போதிய அளவில் குடிக்காததால் சிறுநீரக தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் நாளொன்றுக்கு நான்கு முறை மாணவர்கள் தண்ணீர் குடிக்க வசதியாக மணி(வாட்டர் பெல்) அடிக்க கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள புன்செய் புளியம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

இதன்படி பள்ளிகளில் காலை மணி 10.40, 12.20, பிற்பகல் 3, 4 ஆகிய நேரங்களில் மணி அடிக்கப்படும். அப்போது மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்துள்ள குடிநீரையோ அல்லது பள்ளியில் உள்ள குடிநீரையோ ஆசிரியர் சொல்வது படியே இடைவேளையின் போது உற்சாகமாக அருந்தினர்.

'வாட்டர் பெல்' திட்டம் தொடக்கம்

இதன்மூலம் அவர்களுக்கு எந்த விதமான உடல் உபாதைகளும் இன்றி பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக இருப்பார்கள் எனப் பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பசுமை சாலைகளாகும் தமிழ்நாடு சாலைகள்!

ABOUT THE AUTHOR

...view details