இந்தியா மலேசியா நாடுகளுக்கிடையே நட்புறவை பலப்படுத்தும் வகையில், மலேசியா அமர்வு வாலிபால் கழகத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் போட்டி ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் போட்டி: மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற வீரர்கள்! - Handicapped
ஈரோடு: மலேசியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வாலிபால் போட்டியில் பங்கேற்ற ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த இரண்டு வீரர்கள், மாவட்ட ஆட்சியர் கதிரவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற வீரர்கள்
இதில் இந்தியாவிலிருந்து ஆண்கள் தரப்பில் ஒரு அணியும் பெண்கள் தரப்பில் ஒரு அணியும் பங்கெடுத்தன. நட்புறவு அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிவடைந்தது.
இந்நிலையில், இந்த போட்டியில் பங்கேற்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பச்சமுத்து, மோகன் ஆகிய இருவரும், அம்மாவட்ட ஆட்சியர் கதிரவனை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.