தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: கொடிவேரி அணையில் போலீசார் குவிப்பு - போராட்டம்

ஈரோடு: பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டப்பணியை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால், கொடிவேரி அணைப்பகுதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிந்துள்ளனர்.

கொடிவேரி அணை பகுதியில் காவலர்கள் குவிப்பு

By

Published : Jul 9, 2019, 1:34 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைப்பகுதியின் உட்பகுதியிலிருந்து பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.240 கோடி மதிப்பீட்டில், தமிழ்நாடு அரசால் நிறைவேற்ற பணிகள் தொடங்கின. அப்போது, குடிநீர் திட்டம் செயல்பட்டால் விவசாயத்திற்கு பாசனநீர் கிடைக்காது எனக்கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கொடிவேரி அணை பகுதியில் காவலர்கள் குவிப்பு

அதனால் மாவட்ட நிர்வாகம் உயர்மட்ட தொழில்நுட்ப குழு ஒன்றை அமைத்து அங்கு ஆய்வு மேற்கொண்டு கொடிவேரி அணையின் உட்பகுதியிலிருந்து இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என அறிக்கை சமர்ப்பித்தது.

அதன்பின், மாவட்ட ஆட்சியர் கதிரவன் கொடிவேரி பாசன விவசாயிகளிடம் திட்டம் நிறைவேற்றுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அது தோல்வியில் முடிந்த நிலையில், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலத்துடன், தாங்கள் நேரடி பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடிவோரி பாசன விவசாயிகளுடன், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் ஞாயிற்றுக்கிழமையன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அதுவும் தோல்வியில் முடிவுற்றது.

இந்நிலையில் இத்திட்டத்திற்கான பணிகளை கொடிவேரி அணைப்பகுதியில், குடிநீர் வடிகால் வாரியம் இன்று தொடங்கியுள்ளது. இப்பணியை கொடிவேரி பாசன விவசாயிகள் முற்றுகையிட்டு தடுக்க போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்ற என்பதாலும், பணிகள் பாதிக்கக்கூடாது என்ற நோக்கத்திலும், கடத்தூர் போலீசார் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புக்காக குவிந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details