ஈரோடு:கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த 48 வயதான ஒருவர் கோபி-நம்பியூர் வழித்தடத்தில் இயங்கும் அரசு நகரப் பேருந்தில் நடத்துனராக பணியாற்றிவந்தார். இவர் மீது பெண் பயணிகள் மற்றும் மாணவிகள் அத்துமீறல் புகார்கள் அளித்தனர். குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக நம்பியூர்-புதுச்சூரியம் வழித்தடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஓடும் பேருந்தில் மாணவிகளிடம் அத்துமீறிய நடத்துநர் போக்சோவில் கைது
ஈரோடு மாவட்ட அரசு பேருந்தில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நடத்துநர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 26) நம்பியூர்-புதுச்சூரியம் வழித்தடத்தில் ஏறிய அரசு பள்ளி மாணவிகளின் கைகளை தொட்டும், கண் அடித்தும், தோளை பிடித்தும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால், பெற்றோர் நடுப்பாளையம் அருகே அந்த நடத்துனர் செல்லும் பேருந்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அவர் மீது நம்பியூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அவர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:குடிபோதையில் மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை - போலீஸ் விசாரணை