ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், மலைப்பகுதி கடம்பூர் சுற்றுவட்டாரத்தில் 90க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு ஊராளி பழங்குடியினர் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களது பாரம்பரிய கலை, பண்பாடு வழிபாடு ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும், பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அரசு நலத்திட்டங்களை முறையாக கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் கடம்பூர் பேருந்து நிலையத்தில் பாரம்பரிய முறையிலான கும்மியாட்டம், கிராமிய பாட்டு, இசை நடனம் ஆடி கோரிக்கை விடுத்தனர்.
பாரம்பரிய நடனமாடி அரசுக்கு கோரிக்கை விடுத்த மலைப்பகுதி கிராம மக்கள்
ஈரோடு: மலைப்பகுதி கிராம மக்களின் அடிப்படை தேவையான அரசு நலத்திட்டங்கள் கிடைக்க வேண்டி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக கும்மியாட்டம், கிராமிய பாட்டு, இசை நடனம் ஆடி கோரிக்கை விடுத்தனர்.
மலைப்பகுதி கிராம மக்கள் பாரம்பரிய நடனம்
இது குறித்து பழங்குடி மக்கள் கூறுகையில், "எங்கள் பகுதியில் வாழும் மக்கள் பேருந்து, கல்வி, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், எதுவுமின்றி தவித்து வருகின்றனர். அரசு இங்குள்ள கிரமங்களை ஆய்வு செய்து தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். இங்கிருந்து சத்தியமங்கலத்துக்கு தினந்தோறும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.