தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீரியமடையும் 1 கோடி பனை விதைகளை விதைக்கும் பணி! - ஈரோடு மாவட்ட தமிழ் செய்திகள்

ஈரோடு: உலக சாதனை நிகழ்விற்காகவும் நிலத்தடி நீரை சேமிக்க தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் பணியில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒருபகுதியாக கோபிசெட்டிபாளையத்தில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை தொண்டு நிறுவனத்தினருடன் இணைந்து ஊர் பொதுமக்கள் விதைத்தனர்.

palm tree seeds plantation in erode district

By

Published : Sep 23, 2019, 11:53 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திற்குட்பட்ட காசிபாளையம் பகுதியில் தமிழமுது தொண்டு நிறுவனத்தின் சார்பில் இரண்டாயிரத்து 555 பனை விதைகளை குளக்கரைகள் சாலையோரங்கள் வாய்க்கால்கரைகளில் விதைக்கப்பட்டன.

அதேபோல் கோபி பசுமை காக்கும் கரங்கள் இயக்கத்தின் சார்பில் வேட்டைகாரன்கோயில் கெட்டிச்செவியூர் செட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆறாயிரத்து 500 பனை விதைகளை நீர்நிலைகளின் அருகிலும் ஏரிக்கரைகளிலும் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இயற்கையின் பேரழிவை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பது பனை மரங்கள். காலப்போக்கில் பனைமரங்கள் அழியும் நிலை ஏற்பட்டதால் நிலத்தடி நீர்மட்டங்கள் வெகுவாக குறையத்தொடங்கியுள்ளது. மழைப் பொழிவும் குறைந்துவரும் நிலையில், மழை பொழிவிற்கும் நிலத்தடி நீர் மட்டம் உயர்விற்கும் பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் பனை விதைகள் விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்கள் சமூக செயற்பாட்டாளர்கள் விவசாயிகள் அறக்கட்டளையினர் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து தமிழ்நாடு முழுவதும் நான்கு கோடி மரங்கள் நடவு செய்து வளர்ப்பது என்ற நோக்கில் செயல்பட்டுவருகின்றனர்.

அதில் ஒரு கோடி பனை மரங்களை தமிழ்நாடு முழுவதும் ஒரேநாளில் விதைப்பது என்று முடிவு செய்து இன்று பனை விதைகளை விதைக்கும் பணியில் அனைத்துத் தரப்பினரும் ஈடுபட்டுவருகின்றனர்.

palm tree seeds plantation in erode district

இதனைத் தொடர்ந்து நேற்று பனை விதைகள் விதைக்கும் பகுதியில் பொதுமக்கள், விவசாயிகள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டு பனை விதைகளை விதைத்தனர்.

இதையும் படிங்க: 3,000 பனை விதைகளை நட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியினர்!

ABOUT THE AUTHOR

...view details