தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பரவலைத் தடுக்க வேப்பிலை தோரணம் கட்டிய கிராம மக்கள்! - கரோனா கட்டுப்பாடு

ஈரோடு: கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த கிராமம் முழுவதும் பொதுமக்கள் வேப்பிலை தோரணம் கட்டியுள்ளனர்.

வேப்பிலை தோரணம் கட்டிய கிராம மக்கள்
வேப்பிலை தோரணம் கட்டிய கிராம மக்கள்

By

Published : May 17, 2021, 7:56 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி ஆகிய மூன்று வட்டாரங்களிலும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் தொற்றுக்கு அஞ்சி வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

சத்தியமங்கலம் அருகேவுள்ள தொட்டம்பாளையம் கிராமத்தில் கரோனாவுக்கு பயந்து கிராமம் முழுவதும் அனைத்து தெருக்களிலும் பொதுமக்கள் வேப்பிலையை தோரணமாக கட்டி தொங்க விட்டுள்ளனர்.

வேப்பிலை தோரணம் கட்டிய கிராம மக்கள்

மேலும், கிராமத்தின் முக்கிய சாலைகளில் நுழைவு பகுதியிலும் வேப்பிலை தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. வேப்பிலை தோரணம் கட்டுவதால் கரோனா பரவுவது கட்டுப்படும் என கிராம மக்கள் நம்புவதால் ஊர் முழுவதும் தோரணம் கட்டியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனுக்கு நீதி கேட்ட நவீன கண்ணகி

ABOUT THE AUTHOR

...view details