ஈரோடு மாவட்டத்தில் 125க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பொது கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக ஈரோடு கோட்டத்திற்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பொது கலந்தாய்வு நடத்தப்படவில்லையென்று கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது கலந்தாய்வை கிராம நிர்வாக அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, விரைவில் நடத்திட வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினருக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத்தின் ஈரோடு மாவட்ட அவசர பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தங்களது கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 24ஆம் தேதி முதல் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.