தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானிசாகர் தொகுதியில் போட்டியிடாத விஜய் மக்கள் இயக்கம் - பவானிசாகர் விஜய் மக்கள் இயக்கம்

பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள இரண்டு நகராட்சிகள், மூன்று பேரூராட்சிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒருவர்கூட வேட்புமனு தாக்கல்செய்யவில்லை.

விஜய் மக்கள் இயக்கம்
விஜய் மக்கள் இயக்கம்

By

Published : Feb 5, 2022, 5:52 PM IST

ஈரோடு: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி என இரண்டு நகராட்சிகள், பவானிசாகர், அரியப்பம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம் ஆகிய மூன்று பேரூராட்சிகளில் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.

இந்த இரண்டு நகராட்சிகள், மூன்று பேரூராட்சிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல்செய்யவில்லை. இது குறித்து பவானிசாகர் தொகுதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதி தவிர்த்து ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி உள்ளிட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல்செய்துள்ளனர்.

பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிகள், மூன்று பேரூராட்சிகளில் யாரும் வேட்புமனு தாக்கல்செய்யவில்லை” எனத் தெரிவித்தனர். இதன் காரணமாக பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள விஜய் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க:புதுச்சேரி முதலமைச்சர் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details