'விடியலை நோக்கி ஸ்டாலினின் பயணம்' என்ற தலைப்பில், ஈரோடு மாவட்டத்தில் திமுக மகளிரணி செயலரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி பரப்புரைப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வரிசையில், இன்று (டிச.03) சத்தியமங்கலம், தாளவாடி மலைப்பகுதியில் விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்களை சந்தித்து கனிமொழி உரையாடினார்.
ஈரோட்டில் திமுக எம்பி கனிமொழி பரப்புரை பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நடிகர் ரஜினியின் அரசியல் வருகையால் திமுகவின் வெற்றி எந்த விதத்திலும் பாதிக்காது. வாக்கு வங்கியை அவர் சிதைக்க வாய்ப்பில்லை. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் என்று சொல்வது தேர்தலில் தெரியும். கமல்ஹாசன் ரஜினியுடன் கூட்டணி வைப்பது அவருடை விருப்பம்.
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை மத்திய அரசு வழங்க மறுப்பது அடித்தட்டு மக்களை பாதிக்கும் விதமாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.