தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெற்றோர் கண்டிப்பு: நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து கீழே குதித்த இளைஞர் - ஈரோடு மாவட்ட செய்திகள்

வேலைக்குச் செல்லவில்லை எனப் பெற்றோர் கண்டித்ததால் நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து இளைஞர் கீழே குதித்தார்.

நீர்த்தேக்க தொட்டியிலிருந்து கீழே குதிக்கும் இளைஞர்
நீர்த்தேக்க தொட்டியிலிருந்து கீழே குதிக்கும் இளைஞர்

By

Published : Sep 4, 2021, 6:41 AM IST

ஈரோடு: வீரப்பன்சத்திரம் கலைவாணர் வீதியைச் சேர்ந்தவர்கள் சண்முகசுந்தரம், ஆனந்தவல்லி தம்பதி. இவர்களின் மகன் குமரகிரி பட்டப்படிப்பு முடித்துள்ளார். இதனிடையே படித்துவிட்டு பல மாதங்களாகப் பணிக்குச் செல்லாமல் குமரகிரி ஊர் சுற்றியுள்ளார்.

இது தொடர்பாக அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். அதனால் மனவிரக்தி அடைந்த குமரகிரி, வீரப்பன் சத்திரம் பாரதி திரையரங்கு பகுதியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து குதித்தார்.

நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து கீழே குதிக்கும் இளைஞர்

இதையடுத்து நல்வாய்ப்பாக உயிர்பிழைத்த குமரகிரிக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் ஈரோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

இதையும் படிங்க:நடிகை மீரா மிதுனின் 2ஆவது பிணை மனுவும் தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details