தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வெல்லும் - நடிகர் பார்த்திபன்! - Actor Parthiban's comment on citizenship law

ஈரோடு: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும் என திரைப்பட நடிகர் பார்த்திபன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Actor Parthiban's comment on citizenship law
Actor Parthiban's comment on citizenship law

By

Published : Dec 24, 2019, 9:01 AM IST

ஈரோடு மாவட்டம், ரயில்வே காலனியில் சிறகுகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பங்கேற்றார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ஒத்த செருப்பு' படத்திற்குக் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால், அரசின் பரிந்துரை இல்லாமல் தனியாக ஒரு படம் ஆஸ்காருக்கு போனது இதுவே முதல்முறை, ஆஸ்கர் தேர்வுக் குழு பட்டியலில் உள்ள 'ஒத்த செருப்பு' படத்திற்கு விருது கிடைக்கும் என்ற நற்செய்திக்காக காத்திருக்கிறேன் என்றார்.

நடிகர் பார்த்திபன் செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து அவர் பேசுகையில், ' பிரிவினை இல்லாத இந்தியா வன்முறை இல்லாத இதயம் என்பதே எனது ஆசை. போராடும் மாணவர்களின் குரல் வலையை நெரிக்கக்கூடாது எனவும்; குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும் எனவும் ஜல்லிகட்டுக்காக மாணவர்கள் திடமாக போராட்டத்தில் ஈடுபட்டதால் வெற்றி கிடைத்தது.

அதேபோல், குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கும் வெற்றி கிடைக்கும்' என நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க:

திரையரங்கு உரிமையாளர்களுக்கு பார்த்திபன் வேண்டுகோள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details