தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெக்ஸ்வேலியில் 'வீவ்ஸ்' ஜவுளி கண்காட்சி தொடக்கம்! - டெக்ஸ்வேலி

ஈரோடு: இந்திய தொழில் கூட்டமைப்பு, டெக்ஸ்வேலி சார்பில் ‘வீவ்ஸ் -2019’ சர்வதேச ஜவுளி கண்காட்சி ஈரோட்டில் தொடங்கியது.

Erode
vevs-2019-exhibition

By

Published : Nov 27, 2019, 9:01 PM IST

ஈரோடு டெக்ஸ்வேலியில் ''வீவ்ஸ் 2019'' என்ற பெயரில் தென்னிந்திய முதன்மை ஜவுளி கண்காட்சி 250 அரங்குகளுடன் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கியது.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) - டெக்ஸ்வேலி இணைந்து நடத்தும் இக்கண்காட்சிக்கான தொடக்க விழா டெக்ஸ்வேலி தலைவர் லோட்டஸ் பெரியசாமி, துணைத்தலைவர் யூ.ஆர்.சி தேவராஜன், நிர்வாக இயக்குனர் ராஜசேகர் ஆகியோருடன் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் துணைத் தலைவர் சக்திவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

250 அரங்கங்கள் கொண்ட கண்காட்சியை ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் துணைத் தலைவர் சக்திவேல் துவக்கி வைத்தார். முன்னதாக 10 சிறந்த தொழில் முனைவோற்கு விருதும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து டெக்ஸ்வேலி துணைத் தலைவர் யூ.ஆர்.சி. தேவராஜன் கூறும்போது, ''இந்த ஆண்டு இந்திய தொழில் கூட்டமைப்பு ஆதரவுடன் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறப்பு பிரதிநிதிகள் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்'' என்றார்.

டெக்ஸ்வேலியில் வீவ்ஸ் 2019 தொடக்கம்

இந்த கண்காட்சியில் நூல்கள், துணிகள், ஆடைகள், வீட்டு அலங்கார துணிகள், நிலையான தொழிலகங்கள் மற்றும் பாரம்பரிய ஆடைகள் உள்ளிட்ட ஜவுளி தொழில் சார்ந்த ஏராளமானவை இடம்பெற்றுள்ளன. இன்று தொடங்கி வரும் 30 ஆம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது.

இதையும் படிக்க: 'வெளிநாட்டு வேலைக் கனவால் சுழலில் சிக்கும் இளைஞர்கள்' - திக்கற்றவர்களைக் காக்கும் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details