ஈரோடு:வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில், தேர்தல் கண்காணிப்பு வாகன தணிக்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தொகுதியின் எல்லைகளில் வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு செய்வதற்காக மூன்று நிலை கண்காணிப்பு குழுக்களும், தொகுதிக்குள் சோதனை நடத்த மூன்று பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் ஒரு அலுவலர், ஒரு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 3 போலீசாரும் ஒரு வீடியோ ஒளிப்பதிவாளரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் ஏதேனும் வந்தால் அந்த இடத்திற்கு பறக்கும் படை குழு சென்று சோதனை நடத்தும்.