ஈரோடு:சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் புகழ்பெற்ற வாரச்சந்தைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம்.
சந்தை இடமாற்றத்தை எதிர்த்துப் போராட்டம்:
விவசாயிகள் நேரடியாக காய்கறி வாங்கிச் சந்தையில் விற்பனை செய்வதால், காய்கறிகள் விலை வெளிச்சந்தையை விடக்குறைவாகக் கிடைப்பதால் கிராமப்புறங்களில் இருந்து மக்கள் வந்து செல்வார்கள்.
வாரச்சந்தையை நம்பி 500-க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் வாழ்ந்து வருகின்றனர்.
காய்கறி, இனிப்பு காரம், வெற்றிலை, கருவாடு, பழங்கள், கால்நடை கயிறு கடை, வளையல் கடை சிறு வியாபாரிகள் வாரச்சந்தையை நம்பியுள்ள நிலையில் சத்தியமங்கலம் நகராட்சியினர் வேறு இடத்திற்கு மாற்றுவதாகத் தகவல் கிடைத்தநிலையில், வாரச்சந்தை வியாபாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வாரச்சந்தையில் கோஷமிட்டனர்.
நூற்றாண்டைக் கடந்த சத்தியமங்கலம் வாரச்சந்தையை இடமாற்ற வாரச்சந்தை வியாபாரிகள் எதிர்ப்பு! நகரின் மத்தியில் வாரச்சந்தை இருப்பதால் மக்கள் எளிதாக வந்து செல்வதாகவும் சத்தியமங்கலத்தில் இருந்து 2 கி.மீ., தூரம் உள்ள குப்பைக் கிடங்கிற்கு மாற்றினால் சந்தை மதிப்பிழந்து விடும் எனவும் தெரிவித்தனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வாரச்சந்தையை ஒட்டியுள்ள தினசரி மார்க்கெட்டு ரூ.4.60 கோடி செலவில் நவீனப்படுத்தபடுவதாகவும்; வாரச்சந்தையை முழுமையாக மாற்றாமல் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:மூலப்பொருள் விலை உயர்வால் சிறு, குறு தொழில்கள் முடக்கம் - முத்தரசன்