தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காய்கறிகளின் விலை குறைவு - பொதுமக்கள் மகிழ்ச்சி

ஈரோடு: மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கியுள்ளதால் கடந்த சில வாரங்களாக உச்சக்கட்ட விலையில் விற்பனையான காய்கறிகளின் விலை கட்டுக்குள் வந்துள்ளது.

Erode market news  ஈரோடு காய்கறி சந்தை  ஈரோடு மாவட்டச் செய்திகள்  vegetables market  ஈரோடு காய்கறிகளின் விலை  vegetables price get low in erode
காய்கறிகளின் விலை அதிரடி குறைவு - பொதுமக்கள் மகிழ்ச்சி

By

Published : Jan 14, 2020, 5:17 PM IST

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையின்போது குடும்பத்தினர் அனைவரும் கூடியிருந்து பொங்கல் வைத்து தங்களுக்கு விருப்பமான உணவு வகைகளை சமைத்து தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒருங்கிணைந்து கொண்டாடுவது வாடிக்கையான நிகழ்வாகும்.

இந்நிலையில், ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் கடந்த சில வாரங்களாக உச்சக்கட்ட விலைக்கு விற்பனை செய்யப்பட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் கட்டுக்குள் வந்துள்ளது. மழைக்காலம் முடிவுற்று பனிக்காலம் தொடங்கியுள்ளதால் அனைத்து காய்கறிகளின் வரத்தும் அதிகரித்து விலையும் வெகுவாகக் குறைந்துள்ளது.

காய்கறிகளின் விலை அதிரடி குறைவு - பொதுமக்கள் மகிழ்ச்சி

காய்கறிகளின் விலை வெகுவாக குறைந்துள்ளதால் தினசரி சந்தைக்கு மக்களின் கூட்டம் வழக்கத்தை விடவும் அதிகரித்து காணப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் ஒரு கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தின் விலை குறைந்து இன்று 1கிலோ 40ரூபாய் முதல் 60 ரூபாய் வரையும் 1 கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகளின் விலை கட்டுக்குள் வந்துள்ளதால் காய்கறிகளை வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: குப்பைகளை பிரித்து கொடுக்காவிட்டால் அபராதம் - முன்னாள் நீதிபதி மரு.ஜோதிமணி

ABOUT THE AUTHOR

...view details