ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள காசிபாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி வேல்முருகனின் மகன் கவினேஷ், வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று வழக்கம் போல பள்ளிக்குச் செல்வதற்காக காந்திநகர் பேருந்து நிறுத்தத்தில் கவினேஷ் நின்று கொண்டிருந்தார்.
அப்போது சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா வேனுக்கு குறுக்கே இருசக்கர வாகனம் ஒன்று வந்தது. இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக வேன் ஓட்டுநர் சதீஷ் பிரேக் போட்டதில், நிலைதடுமாறிய வேன், பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்த மாணவர் கவினேஷ் மீது மோதி, கவிழ்ந்தது. இதில் மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.