ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இப்பகுதியில் தொடர்ந்து பெய்த சாரல் மழையால் சாலைகளில் நீர் வழிந்தோடியது.
ஆசனூரில் சாரல் மழை: வேன் கவிழ்ந்து விபத்து! - Erode
ஈரோடு: ஆசனூரில் தொடர்ந்து பெய்த சாரல் மழையால் காரப்பள்ளம் அருகே எதிரேவந்த லாரிக்கு வழிவிட முயன்ற வேன் ஒன்று நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
accident
இந்நிலையில் கோபியில் இருந்து மைசூருவுக்கு நெகிழிக் குடம் ஏற்றிய வேன் ஒன்று காரப்பள்ளம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரேவந்த லாரிக்கு வழிவிடுவதற்கு ஓரமாக சென்று பிரேக் போட்டபோது வேன் நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில் வேன் ஓட்டுநருக்கு காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். தகவலறிந்து அங்கு வந்த மீட்புப் படையினர் மீட்பு வாகனத்தின் மூலம் வேனை அப்புறப்படுத்தினர்.