தமிழ்நாடு

tamil nadu

சூறாவளிக்காற்றில் ரூ.1 கோடி மதிப்பிலான வாழைமரங்கள் சேதம்!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ரூ.1 கோடி மதிப்பிலான 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதற்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

By

Published : May 8, 2019, 2:53 PM IST

Published : May 8, 2019, 2:53 PM IST

banana damage

நேற்று பெய்த கனமழை மற்றும் சூறாவளிக்காற்றினால் இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த செவ்வாழை, கதளி, ரோப்பஸ்டோ, தேன்கதிர், பூப்பழம் உள்ளிட்ட இரக வாழைகள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்ததாகவும், இவை அனைத்தும் சேதமடைந்துள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

சூறாவளிக்காற்றில் ரூ.1 கோடி மதிப்பிலான வாழைமரங்கள் சேதம்

இப்பகுதியில் சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு ஏக்கருக்கு முதலீடு செலவு மட்டும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ஆகும் எனவும் தற்போது செய்துள்ள முதலீடுகள் முற்றிலும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆனால், தமிழக அரசு சேதமடைந்த வாழைக்கு இழப்பீடு வழங்குவதில்லை எனவும் காப்பீட்டுத்திட்டமும் நடைமுறையில் இல்லை என்றும் குற்றம் சுமத்துகின்றனர்.

சூறாவளிக்காற்றினால் சேதமடைந்த வாழைகளை அரசு சார்பில் இதுவரை அலுவலர்கள் யாரும் வந்து பார்வையிடவில்லை எனவும் வருவாய்துறையினர் சாய்ந்துள்ள வாழைகளை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என்று அலட்சியமாக பதிலளிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.

தற்போது சாய்ந்துள்ள வாழைகளுக்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் தனிநபர் பயிர் காப்பீட்டுத்திட்டத்தை அரசு அமல்படுத்தவேண்டும் என்றும் வாழை சாகுபடி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details