தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடம்பூர் மலைப்பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞர் கொலை - கேர்மாளம் - கடம்பூர்

ஈரோடு: கடம்பூர் மலைப் பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Kadambur hills
Sathyamangalam

By

Published : Nov 29, 2020, 4:22 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் வைத்தியநாதபுரம் உள்ளது. இக்கிராமத்துக்கு செல்ல வேண்டுமெனில் யானைகள் வழித்தடத்தில்தான் செல்ல வேண்டும்.

இந்நிலையில், கேர்மாளம் - கடம்பூர் இடையே உள்ள சாலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த கடம்பூர் காவல்துறையினர், உடலை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்ட போது, தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இறந்தவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details