தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாதாள சாக்கடை திட்டப்பணியில் சுணக்கம்: வியாபாரிகள் சாலை மறியல் - வியாபாரிகள் சாலைமறியல்

ஈரோடு: சத்தியமங்கலத்தில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நீண்ட நாள்களாக நடைபெறுவதால் வர்த்தகம் பாதிக்கப்படுவதாகக் கூறி வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

underground drainage project  Delaying : Merchants roadblock protest in erode
underground drainage project Delaying : Merchants roadblock protest in erode

By

Published : Jul 30, 2020, 3:36 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கடந்த வாரம் சத்யா தியேட்டர் சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு குழி தோண்டும் பணி நடைபெற்றது.

இதனால் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வரையிலுள்ள 50க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டது. தற்போது வரை இதற்கான பணிகள் நடைபெற்றுவருவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சிறு கடைகளில் வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

பணிகளை விரைந்து முடிக்குமாறு நகராட்சியிடம் பலமுறை வியாபாரிகள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், நகாரட்சியைக் கண்டித்து அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் சத்தியமங்கலம் திப்புசுல்தான் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த சத்தியமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்பையா வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து பணிகள் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அளித்து உறுதியளித்தார். இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details