தமிழ்நாடு அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்துத் தரப்பு பயனாளிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக விலையில்லா ஆடுகளும், நாட்டுக்கோழிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
145 பயனாளிகளுக்கு விலையில்லா கோழிகள் வழங்கிய எம்எல்ஏ - எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்
ஈரோடு: பெருந்துறை அருகே 145 பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக் கோழிகளை பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார்.
அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள நிச்சாம்பாளையம் பகுதியில் விலையில்லா நாட்டுக்கோழிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று 145 பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக் கோழிகளை வழங்கிச் சிறப்பித்தார்.
அப்போது அவர் பேசுகையில், கரோனா காலத்தில் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடுகளில் இருந்தபடியே தங்களது வருவாயை பெருக்கிக் கொள்வதற்கான வழிமுறையின் படி விலையில்லா நாட்டுக் கோழிகள் வழங்கப்படுகின்றன. இதை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.