தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு - பொதுமக்கள் ஏமாற்றம் - கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

ஈரோடு: கரோனா தடுப்பூசி மருந்து இருப்பில் இல்லாததால் ஈரோடு அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

unavailability of covid vaccine
கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

By

Published : Apr 16, 2021, 6:42 PM IST

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனி வார்டு அமைத்து கோவாக்சின் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இதில், தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள்
ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை கொண்டு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புஞ்சை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை என மொத்தம் ஆயிரத்து 427 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த சில நாள்களாக புஞ்சை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவாக்சின் தடுப்பூசி
மருந்து போதிய அளவு இருப்பு இல்லாமல் உள்ளது. இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அங்கு வரும் பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது,

"ஏப்ரல் 14ஆம் தேதி முதல் கோவாக்சின் தடுப்பூசி மருந்து இருப்பில் இல்லை. மாவட்ட மருத்துவமனையில் கேட்டுள்ளோம். இன்னும் ஓரிரு நாட்களில் வந்து விடும். மருந்து வந்தவுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்" என தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலை தடுக்க கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 22ஆம்

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், மருந்து தட்டுப்பாடு நிலவு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பவானி அரசு மருத்துவமனையில் இன்று தடுப்பூசி முகாம் இல்லை

ABOUT THE AUTHOR

...view details