ஈரோடு வந்த திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பெரியார், அண்ணா நினைவு இல்லத்தில் இருவரது உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,
‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. எந்த மொழிக்கும் திமுக எதிர்ப்பு கிடையாது. இந்தி மொழி திணிப்பிற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மீண்டும் இந்தி திணிக்க முயற்சித்தால் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.