ஈரோடு: கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா , மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் முத்துச்சாமி ஆகியோரை ஆதரித்து சூரம்பட்டியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
கலைஞரா.. மோடியா.. பார்த்து விடலாமா? - உதயநிதி ஆவேசம் - Erode West DMK candidate Muthuchamy
தேர்தலில் இந்தப் பக்கம் கலைஞரும் எதிர்ப்பக்கம் மோடியும் போட்டியிடுகின்றனர். கலைஞரா, மோடியா என்பதை பார்த்து விடலாம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்தார்.
சூரம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
அப்போது பேசிய அவர், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வீர்களா என ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், " முதலமைச்சர் தமிழ்நாட்டை மோடியிடம் அடகு வைத்து விட்டார். அதிமுகவும் பாஜகவும் வேறல்ல. இரண்டும் ஒன்றே. தேர்தலில் இந்தப் பக்கம் கலைஞர் போட்டியிடுகிறார். எதிர்ப்பக்கம் மோடி போட்டியிடுகிறார். கலைஞரா, மோடியா என்பதை பார்த்து விடலாம்" என ஆவேசமாக தெரிவித்தார்.