ஈரோடு:கர்நாடக மாநிலத்தில் இருந்து பண்ணாரி சோதனை சாவடி வழியாக தமிழ்நாட்டிற்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் பண்ணாரி சோதனை சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த பிக்கப் வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 68 சாக்கு மூட்டைகளில் இரண்டு டன் எடையுள்ள கணேஷ் பாக்கு, ஸ்வாகா கோல்டு புகையிலை, விமல் பான்மசாலா, விமல் புகையிலை உள்ளிட்ட பல்வேறு வகையான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.