சேலம் மாவட்டம் பிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் இன்று (அக். 3) அதிகாலை தனது மனைவியுடன் சேலத்திலிருந்து ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். இருவரும் தங்களுடன் நான்கு கைப்பைகளைக் கொண்டு வந்துள்ளனர்.
ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சத்தியமங்கலத்திற்குச் செல்வதற்கு தயாரானபோது அவர்கள் கொண்டுவந்த கைப்பையிலிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7 சவரன் தங்கத் தாலிக் கொடி, தங்கக் காசுகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, அதே பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரிடம் புகார் தெரிவித்த சுகுமார், தங்களுடன் சேலத்திலிருந்து வந்த இருவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தார்.