தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா குறித்து வதந்தி பரப்பியவர்கள் குண்டாஸ் சட்டத்தில் கைது! - ஈரோட்டில் கரோனா வதந்தி பரப்பியவர்கள் குண்டாஸ் சட்டத்தில் கைது

ஈரோடு: கோபிசெட்டிபாளயைம் அருகே 24 பேருக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளதாக வதந்தியைப் பரப்பியவர்களை காவல் துறையினர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்தனர்.

வதந்தி பரப்பியவர்கள் குண்டாஸ் சட்டத்தில் கைது
வதந்தி பரப்பியவர்கள் குண்டாஸ் சட்டத்தில் கைது

By

Published : Mar 23, 2020, 11:27 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளயைம் அருகே உள்ள டி.என்.பாளையம் பகுதியில், 24 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எவரும் ஊருக்குள் வரவேண்டாம் எனவும் வாட்ஸ்அப் மூலம் வதந்தி பரவியுள்ளது.

இந்த வதந்தி வைரலாகி அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது தவறான செய்தி என்றும், இதனை பரப்பியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிஎன்.பாளையம் வட்டார மருத்துவ அலுவலர்கள், பங்களாபுதூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

புகாரின் பேரில் விசாரணையைத் தொடங்கிய காவல் துறையினர், டி.என். பாளையம் ஆண்டவர் கோவில் வீதியைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் பூபாலன், இந்திர வீதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்தனர்.

இதையடுத்து வீண் வதந்தியைப் பரப்பியதாக மாவட்ட ஆட்சியர் இருவர் மீது குண்டாஸ் சட்டத்தில் கைதுசெய்ய பரிந்துரை செய்தார். பின்னர், இருவரையம் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

மேலும், இதுபோன்ற வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கதிரவன் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பக் கூடாது - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details