ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவரது தோட்டத்தில் இன்று (நவ. 03) அதிகாலை சத்தம்கேட்டு கிணற்றருகே வந்து பார்த்தார்.
விவசாய மின்சார மோட்டார் திருட முயன்ற 2 பேர் கைது - மோட்டர் திருடியவர்கள் கைது
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே விவசாய மின்சார மோட்டார் திருட முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்போது அங்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் மின் மோட்டாரை திருட முயன்றது. இதனைப் பார்த்த பிரபு சத்தம் போட்டதால் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு வந்தனர். விவசாயிகள் வருவதைப் பார்த்த திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது இரு சிறுவர்கள் பிடிபட்டனர். அவர்கள் புஞ்சைபுளியம்பட்டியைச் சேர்ந்த கௌதம், விஜயராஜ் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஏற்கனவே திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டு புளியம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு நடந்து வருகிறது.
பிடிபட்ட இருவரையும் புளியம்பட்டி காவல் துறையினரிடம் விவசாயிகள் ஒப்படைத்தனர். விவசாயிகள் தாக்கியதில் பலத்த காயமடைந்த இருவரும் சத்தியமான அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தப்பியோட மற்ற மூவரையும் புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினர் தேடிவருகின்றனர்.